சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா இணையும் புதிய படம்:
- சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் SK25 என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். சுதா கொங்கரா இதற்கு முன்பு சூரரை போற்று என்ற படத்தை உருவாக்கி இருந்தார். அது வசூல்ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது சுதா கொங்கரா சிவகார்த்திகேயனின் SK25 என்ற படத்தை உருவாக்க உள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது “அமரன்” திரைப்படத்தில் நடித்து, நல்ல வரவேற்பை பெற்றது. சுதா கொங்கரா இயக்க்கும் sk25 என்ற படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுயுள்ளது.
தலைப்பு பற்றிய விவரம்:
- இந்த படத்திற்கு தலைப்பு “புறநானூறு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைப்பில் உள்ள சில வார்த்தைகள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளதால், முழு தலைப்பு வெளியாகவில்லை.
கதை அமைப்பு:
- 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம். சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகரமான கல்லூரி மாணவனாக நடிக்கிறார். படம் தமிழரின் வீரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பரிணாமமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் ஒரு காலப்பொழுது அடிப்படையிலான ஆக்ஷன் திரில்லராக உருவாக உள்ளது. இப்படம் 2025தில் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது.
தொழில்நுட்ப துறை:
- G.V. பிரகாஷ் இசையமைக்கிறார், இது அவரது 100வது திரைப்படம் ஆகும். இந்த படத்தின் புதிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் Dawn Pictures என்ற நிறுவனத்தின் கீழ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு 140 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் தனது நடப்பு படமான “சிபி சக்கரவர்த்தி” இயக்கும் படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் SK25 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
திரைப்படத்தின் கதாபாத்திரம்:
- சூர்யா இந்த படத்தில் இருந்து ஒரு சில காரணங்களால் விலகி விட்டார். அந்தன் பின்பு சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கைகோர்த்தார். ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளார். அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். படத்தில் நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், மற்றும் விஜய் வர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இது ஒரு மிகபெரிய பிரமாண்ட படமாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது. இப்போதைக்கு இப்படத்தின் கதை, படப்பிடிப்பு துவங்கும் தேதிகள் போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.