Home Cinema விடாமுயற்சி திரைப்படத்தின் உரிமை பற்றிய உண்மை வெளியாகியுள்ளது

விடாமுயற்சி திரைப்படத்தின் உரிமை பற்றிய உண்மை வெளியாகியுள்ளது

22
0

விடாமுயற்சி திரைப்படத்தின் உரிமை மற்றும் டப்பிங்:

  • அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படம் ஹாலிவுட் படமான “Breakdown” (1997) படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • மகிழ் திருமேனி இயக்கும் இந்த படம், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் உள்ளார்.
  • இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டது . முன்னதாக, படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது என கூறப்பட்ட நிலையில், தற்போது படம் 2025 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் இயக்கம் மகிழ் திருமேனி மேற்கொண்டுள்ளார்.

விடாமுயற்சி திரைப்பட உரிமை விவகாரம்:

  • “Breakdown” (1997) படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், பரமவுண்ட் பிக்சர்ஸ் (Paramount Pictures) நிறுவனத்தினர், இந்த ரீமேக்கிற்கான உரிமை பெறப்படவில்லை எனக் கூறி லைகா புரொடக்ஷன்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானபோது, அதன் கதை, சின்னமாற்றத்துடன் “Breakdown” படத்தின் கதைக்குச் சற்றே ஒத்துப்போவதாக இருந்தது, இதனால் இந்த சர்ச்சை ஏற்பட்டது.

தனஞ்ஜெயன் கூறிய கருத்து:

  • இதனால் அந்த நிறுவனம் 150 கோடி கேட்டு வழக்கு தொடரப்பட்டது என்று பேச்சி எழுந்தது. தற்போது இதை பற்றி தயாரிப்பாளார் தனஞ்ஜெயன் பேசியுள்ளார்.லைகா தயாரிப்பு தரப்பில் விசாரித்த போது Breakdown திரைப்படத்திற்கான உரிமையை நாங்கள் வாங்கிவிட்டோம் என்று கூறினார்கள்.
  • மேலும் பல கட்சிகள் ஒரே மாதிரியாக இருந்தான் காரணமாக நிறுவணம் இதற்கான உரிமையை வாங்கியுள்ளனர். 150 கோடி தொடரப்பட்ட வழக்கு’ என செய்தி பொய் என்றும் கூரியுள்ளார்.
  • இந்தனால் படத்தின் ரிலீஸுக்கு எந்த விதமான தடைகள் ஏற்படுமா என்று சந்தேகம் எழுந்தது. தற்போது’ இந்த பொய் செய்திக்கு முற்று புள்ளி வைக்கபட்டடுள்ளது.

“விடாமுயற்சி” படத்தின் டப்பிங் :

  • “விடாமுயற்சி” படத்தின் டப்பிங் பணிகள் அக்டோபர் 28 அன்று பூஜையுடன் துவங்கியது. படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தின் அஜித் அவருக்கான டைப்பிங் வேலைகளும் தற்போது முடித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்கள். இதற்கு முன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது, குறிப்பாக அஜர்பைஜானில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சமிபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அஜித் நடிப்பில் வரவிருக்கும் படங்கள்:

  • தல அஜித்தின் “விடாமுயற்சி” படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி” இந்த படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பு மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் இதில் அஜித் குமார், த்ரிஷா, பிரபு, ஜெயராம், யோகி பாபு மற்றும் பலர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைகிறார் வெளியீடு தேதி முதலில் 2025 பொங்கலுக்கு வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
  • ஆனால், தற்போதைய தகவல்களின் படி, இதன் வெளியீடு 2025 கோடை பருவத்துக்கு மாற்றப்பட்டிருக்கலாம். இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. “விடாமுயற்சி” ஒரு அதிரடி திரில்லர் கதையாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. “குட் பேட் அக்லி” ஒரு ஆக்ஷன் காமெடி படமாக வெளிவருகிறது.